பாலியல் வன்கொடுமை அல்ல..விஷம் அருந்தி இறந்ததாக.. பிரேத பரிசோதனையில் தகவல்.!
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள உத்தரா தினாஜ்பூர் என்ற மாவட்டத்தில் கலகாச்சில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கிராமவாசிகள் குற்றம் சாட்டினர். இதனால், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதைதொடர்ந்து, நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் வாகனங்கள் மற்றும் பொது பேருந்துகளுக்கு அப்பகுதி மக்கள் தீ வைத்தனர்.
பின்னர், பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்நிலையில், அந்தபெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், விஷம் அருந்தி அந்த சிறுமி உயிழந்தார் எனவும், வெளிப்புற காயம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.