SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
Supreme Court: தேர்தல் பாத்திரம் விவகாரம் தொடர்பாக எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதனை தேர்தல் ஆணையமும் வெளியிட்டது. அதில், எந்தந்த கட்சிக்கு, எந்தந்த நிறுவனங்கள் பணம் வழங்கியது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றது. ஆனால், சீரியல் நம்பர்கள் வெளியிடவில்லை.
Read More – அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.!
தேர்தல் பத்திர எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிடாதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிகிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது கேள்விகளை எழுப்பிய நீதிபதி, தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என்றும் இதுகுறித்து இன்று விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
Read More – மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்… வரலாற்று வெற்றி!
அதன்படி, தேர்தல் பத்திர எண்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கையில் திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். தலைமை நீதிபதி கூறியதாவது, அனைத்து தரவுகளையும் வெளியிட உத்தரவிட்டும் எஸ்பிஐ, ஏன் சீரியஸ் எண்களை வெளியிடவில்லை? உச்சநீதிமன்ற உத்தரவிற்காக ஏன் காத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி, அணைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது என்றார்.
உத்தரவில் என்ன சந்தேகம் உள்ளது? நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? என கட்டமாக தெரிவித்தார். எனவே, உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புப்படி பத்திர எண்களை வெளியிட வேண்டும். ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் பொதுவெளியில் SBI வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.
Read More – பாஜகவை வீழ்த்துவதிலேயே ராகுல் காந்தியின் வெற்றி உள்ளது: மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
அதாவது, மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திர ரகசிய எண்ணை வெளியிடுவது தொடர்பாக எஸ்பிஐ வங்கி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பத்திரம் வாங்கப்பட்ட தேதி, பெயர், சீரியல் எண்கள், ஆல்பா நியூமரிக் எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட வேண்டும். இதற்கு எஸ்பிஐ வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், எஸ்பிஐ தரவுகளை தாக்கல் செய்தபின் தேர்தல் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.