அனுமதி கொடுத்தால் ஜெகநாதரே மன்னிக்கமாட்டார்.! ரத யாத்திரைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.!

Default Image

ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை புகழ்பெற்றது. வருகிற 23-ம் தேதி நடைபெறவிருந்த பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரதங்களை இழுக்க இயந்திரங்கள் அல்லது யானைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.  ஆனால், யானைகள் மூலம் ரதங்களை இழுக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கு நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாட்டே தலைமையிலான அமர்வு, தேரோட்டத்துக்கு அனுமதி அளித்தால், ஜெகநாதர் தங்களை மன்னித்து அருள மாட்டார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பொதுமக்களின் நலனையும், பாதுகாப்பையும் கருதி நிகழாண்டு பூரி தேரோட்ட நிகழ்வை அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்