ஜெய் ஸ்ரீராம் என கூறுபவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல! பிரதமருக்கு 61 பேர் ஆதரவு கடிதம்!

பிரதமர் மோடிக்கு சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி என 49 பேர், ‘ ஜெய் ஸ்ரீ ராம் எனும் கோஷங்களோடு சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு குற்ற செயல்களின் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கடிதம் அனுப்பினர்.
தற்போது அதற்க்கு எதிராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், எழுத்தாளர் பிரசூன் ஜோஷி, எம்பி சோனால் மான்சிங் போன்ற 61 பேர், ‘ ஜெய் ஸ்ரீ ராம் என கூறும் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. ஜெய் ஸ்ரீராம் என கூறும் அனைவரும் குற்றவாளிகள் போல சித்தரிக்கப்படுகின்றனர். இது பக்தர்கள் மீதான நம்பிக்கையை உடைத்து தவறான தோற்றத்தை உண்டாக்குகிறது இது நிறுத்தப்பட வேண்டும்.’ என கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025