டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது- கெஜ்ரிவால்!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் எந்தொரு இடத்திலும் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். முதலில், 20 பேருக்கு மேல் கூடகூடாது என அறிவித்தார். ஆனால் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், அது பரவாமல் இருக்க 5 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என அறிவித்தார்.