24 மணி நேரத்திற்கு மேலாகியும் டெல்லி சட்டப்பேரவையின் மொத்த வாக்குப்பதிவு என்ன என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் 62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற்ற நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று முன்தினம் டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக அங்கு வாக்குப்பதிவு காலை முதலே மந்தமாக இருந்து வந்தது.ஆனால் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்கு சதவிகிதம் என்ன என்பதை அவ்வப்போது அறிவித்து வந்தது.இறுதியாக சனிக்கிழமை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பின்பு வெளியாகி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் மொத்த வாக்குப்பதிவு என்ன என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,பெரும் அதிர்ச்சையாக உள்ளது.தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது ? என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் முடிந்து பல மணி நேரமாகியும் இன்னும் ஏன் இறுதி வாக்குப்பதிவை வெளியிடவில்லை? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பின்னர் தான் நேற்று டெல்லி தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்பொழுது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. கணக்கு எடுக்கும் பணி காரணமாகவும், சரிபார்ப்பு பணி காரணமாகவும் இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை வெளியிட தாமதம் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…