காங். தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடவில்லை.. எனது ஆதரவு அவருக்குத்தான் – திக்விஜய் சிங் திடீர் முடிவு

Default Image

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிப்பதாக திக்விஜய் சிங் அறிவிப்பு.

காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் திடீர் முடிவு செய்து அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இத்தேர்தலில் சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த சமயத்தில் சசிதரூர், திக் விஜயசிங், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர். ஜார்க்கண்ட் மாநித்தின் கே.என்.திரிபாதியும் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டது. திக்விஜய் சிங் மற்றும் சசி தரூர் இன்று மதியம் 3 மணிக்குள் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடவில்லை என திக் விஜய்சிங் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் போட்டியிட உள்ளேன் என அறிவித்த, பின்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டார். தற்போது திக் விஜய்சிங்கும் பின்வாங்கியுள்ளார். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்று திட்டவட்டமாக உள்ளது. இதனால் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவார்கள், ஏற்கனவே வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் உட்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. இதனை காரணமாக போட்டியில் இருந்து பின்வாங்கி உள்ளனர்.

திக் விஜய்சிங் கூறுகையில், மல்லிகார்ஜுன் கார்கே ஜி எனக்கு மூத்தவர். நான் அவரது இல்லத்திற்குச் சென்று, அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தால் நான் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டேன் என்று கூறினேன். தாக்கல் செய்ய மாட்டேன் என்று கூறினார். அதன்பிறகு, அவர் வேட்பாளர் என்பதை பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். எனவே, நான் அவருக்கு ஆதரவாக அளிக்கிறேன் என்றும் அவருக்கு எதிராக போட்டியிடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், எனது வாழ்நாள் முழுவதும் காங்கிரசுக்காக உழைத்துள்ளேன், தொடர்ந்து செய்வேன். தலித், பழங்குடியினர் மற்றும் ஏழைகளுக்காக நிற்பது, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராகப் போராடுவது, காங்கிரஸ் மற்றும் நேரு-காந்தி குடும்பத்திற்கான எனது அர்ப்பணிப்பு ஆகிய 3 விஷயங்களில் நான் சமரசம் செய்து கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்