எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
‘கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை’ குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்து வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,இருதரப்பு உறவுகளைப் பேணுவது முக்கியமானது.சீனாவின் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை கெடுத்துவிட்டன. எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எல்லையில் பதற்றத்தை தணிக்க 9 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பாங்கோங் ஏரி பகுதியில் இந்தியாவும் சீனாவும் முழுமையான படைகளை விலக்க ஒப்புக் கொண்டன என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இதனால் அமைதியை பேண முடியும்.சீன எல்லையில் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள்.ஒரு இன்ச் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்பதை நமது பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன.லடாக் எல்லையில் எந்த சோதனை ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்று பேசியுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…