அரசியல் தலையீடு இல்லை – முப்படை தளபதி பிபின் ராவத்

- போராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று பிபின் ராவத் கூறினார்.
- அரசியல் சார்ந்து செயல்படவில்லை என்று முப்படை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.குறிப்பாக இந்த சட்டத்திற்கு எதிராக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டும் வருகின்றனர்.
இது குறித்து ராணுவ தளபதியாக பதவி வகித்த சமயத்தில் பிபின் ராவத் பேசினார்.அவர் பேசுகையில், உங்களை சரியாக வழிநடத்துபவர்கள் தான் தலைவர்கள். தவறாக வழி வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல.கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில் கூடி போராட்டம் நடைபெற்றப்போது நகரங்களில் வன்முறைச் சம்பவஙகள் அரங்கேறியது தலைமை அல்ல என்று தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது.
இதற்கு இடையில் முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.இதனால் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.இந்நிலையில் இன்று முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.இதன் பின்னர் அவர் கூறுகையில்,ராணுவ நடவடிக்கைகளில் தரைப்படை, கடற்படை, விமானப்படை இணைந்து செயல்படும்.முப்படைகளில் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.அரசியல் சார்ந்து செயல்படாமல் மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே செயல்படுவேன்.இந்திய ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025