டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மூடுபனி காணப்படுகிறது. எதிரில் இருக்கும் பொருள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
அதேபோல், ஏராளமான வெளியூர் ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையும் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இன்றும், கடும் பனிமூட்டத்தால், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 20 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. அதேபோல், 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 24 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
source: dinasuvadu.com
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…