இனி ரயிலில் செல்ல பிராணிகளுக்கு தனி இடம்.! வடகிழக்கு ரயில்வேயின் புதிய முயற்சி.!
ரயில்களில் செல்ல பிராணிகளுக்கு தனி இடம் ஒதுக்க வடகிழக்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியன் ரயில்வேயில் இதுவரையில் செல்ல பிராணிகள் கொண்டு செல்ல அனுமதிஇல்லை. அதற்கென தனி வசதியை வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வடகிழக்கு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அனுமதிக்கும் வகையில் ரயில் பெட்டிகளில் செல்ல பிராணிகளுக்கு தனி இடங்கள் அமைக்க முன்மொழியப்பட்ட ரயில் பெட்டி வடிவமைப்புகளுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த திட்டத்திற்காக ரயில்களின் தனி கம்பார்ட்மெண்ட் வைத்து நாய்களுக்கு கூண்டுகள் வைக்க ஏதுவான இடமாக அந்த பெட்டிகள் மாற்றியமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.