குஜராத் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தாக்கல்.!

Jaishankar GJE

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

குஜராத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 24 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பாஜக குஜராத் பிரிவு தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோருடன் இன்று தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 13 கடைசி தேதியும், வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 17ம் தேதியும், ஒருவேளை தேவைப்பட்டால் வாக்குப்பதிவு ஜூலை 24இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள 11 ராஜ்யசபா தொகுதிகளில், தற்போது 8 தொகுதிகள் பாஜக வசமும் மற்ற 3 தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளது.

பாஜக வசம் உள்ள எட்டு இடங்களில், எஸ் ஜெய்சங்கர், ஜுகல்ஜி தாக்கூர் மற்றும் தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் முடிவடைகிற நிலையில், தற்போது இந்த மூன்று தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்