ரெஸ்டாரண்ட், ஹாஸ்டலுக்கு என்.ஓ.சி சான்றிதழ் கட்டாயமாகிறது.!
டெல்லியில் சிறிய உணவகங்கள் மற்றும் விடுதிகள் இனி, தீ பாதுகாப்பு தடையில்லா(NOC) சான்றிதழ் பெற வேண்டும் என உத்தரவு.
டெல்லியில் 50 இருக்கைகள் கொண்ட சிறிய உணவகங்கள் மற்றும் 10 (அ) அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட விடுதிகள் தீ பாதுகாப்பு தடையில்லா (No Objection Certificate) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு உருவாக்கிய கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது இந்த தடையில்லா (நோ-அப்ஜெக்ஷன்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.