கொரோனா வைரஸ் காரணமாக இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கமாகும்.ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு இதுவரை குளிர்கால கூட்டத் தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் நிலையில்,இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜோஷிக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ,நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக கூட்டத்தொடரை ரத்து செய்வதையும், ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…