2 குழந்தைகள் போதும் ! அப்படி பெற்றுக்கொண்டால் மூன்றாவது குழந்தையின் ஓட்டுரிமை ரத்து! பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக சிறப்பாக நடைபெற்று தேர்தல் முடிவுகளும் வெளியாகிவுள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாகவும் இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனராகவும், யோகா குருவாகவும் பாபா ராம்தேவ் இருந்து வருகிறார்.இவர் சர்சைக்கு பெயர் போகும் வகையில் பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.அதனால் பலரின் எதிர்ப்பையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது, இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அப்படி பெற்றுக்கொண்டால் மூன்றாவது குழந்தையின் ஓட்டுரிமை ரத்து என சட்டம் கொண்டுவரவேண்டும் என்று பாபா ராம்தேவ் சர்சையாக கருத்து தெரிவித்துள்ளார்.இவரது இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.