கிரிப்டோ மைனிங் செலவில் வரி விலக்கு இல்லை- நிதி அமைச்சகம்..!
கிரிப்டோகரன்சிகள் மைனிங் தொழில்நுட்பங்களில் ஏற்படும் உள்கட்டமைப்பு செலவுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்க அனுமதிக்கப்படாது
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையில் கிரிப்ட்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு வருமான வரி 30 சதவீதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கிரிப்ட்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கிரிப்டோகரன்சிகள் அல்லது மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் மைனிங் தொழில்நுட்பங்களில் ஏற்படும் உள்கட்டமைப்பு செலவுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.