நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் கட்டாயம் என்கிற மத்திய கல்வி வாரியம் விதித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வரும் 2018ம் ஆண்டு மாணவர்கள் எழுத போகும் நீட் தேர்விற்கு ஆதார் எண் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக காட்டவேண்டும் என்றும் மத்திய அரசின் உயர் கல்வி துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மேலும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ”2018ம் ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசின் உயர் கல்வி துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் விதிக்கபட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. நீட் போன்று எந்த ஒரு தேசிய அளவிலான தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை. மேலும் அரசு ஆதார் என்கிற தனிநபர் அடையாள அட்டையை தேர்வுகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களுக்காக கட்டாயப்படுத்தக்கூடாது. ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உட்பட அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்து தேர்வு எழுது அனுமதிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…