தொற்றுநோய்களுக்கு எந்த மாநிலங்களும், எல்லைகளும் தெரியாது என உபி அமைச்சர் ஜிதின் பிரசாதா ட்வீட்.
சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை கூடுதலாகிக் கொண்டிருக்கின்றது. வடமாநிலங்களிலிருந்து வருகிற மாணவர்கள் இந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகின்றபோது அவர்களின் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த தொற்று பரவத் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உபி அமைச்சர் ஜிதின் பிரசாதா தனது ட்வீட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘தொற்றுநோய்களுக்கு எந்த மாநிலங்களும், எல்லைகளும் தெரியாது; வட இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக தமிழக அமைச்சரின் கருத்து இருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…