மும்பையில் பாதுகாப்பு இல்லை, உர்ஃபியின் கருத்து கவனிக்கப்படவேண்டியது- மகளிர் ஆணையம்
மும்பையில் பாதுகாப்பு இல்லை எனக் கூறிய உர்ஃபி ஜாவத்தின், புகார் கவனிக்கப்படவேண்டியது என்று மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் சித்ரா வாக்கிற்கு எதிராக உர்ஃபி ஜாவத் அளித்த புகாருக்கு பதிலளித்து, மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகங்கர் மும்பை காவல்துறைக்கு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு இந்தியருக்கும் நாட்டில் சுதந்திரமாக நடமாடும் உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மும்பை போன்ற இந்தியாவின் மிகப்பெரிய நகரத்தில் பாதுகாப்பற்றதாக உணர்வதாக உர்ஃபி ஜாவத், கூறியிருப்பது மிகவும் தீவிரமான விஷயம், இது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சித்ரா வாக், தன்னை பகிரங்கமாக மிரட்டியிருப்பதாக உர்ஃபி ஜாவத் குற்றம் சாட்டி இருக்கிறார்.