காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாது.! டி.கே.சிவகுமார் பரபரப்பு அறிவிப்பு.!
ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரசில் பொறுப்பு வழங்கப்படாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கேசிவக்குமார் தகவல்.
பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கேபிசிசி தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
போட்டியிட சீட் தராததால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகியிருந்தார். கர்நாடகாவில் சீட் கிடைக்காத பாஜக தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரசில் பொறுப்பு வழங்கப்படாது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் எந்த நிபந்தனையும் வைக்கமாட்டார். நாங்கள் எந்த பொறுப்பும் வழங்க போவதில்லை, கட்சியின் கொள்கைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்றார்.