எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தையோ, வெறுப்புணர்வையோ யாரிடமும் பரப்புவது இல்லை. மத வெறியர்கள் தான் இந்த கருத்துகளை தவறாக சித்தரித்து மக்களிடம் கூறி வருகின்றனர். – கேரள உயர்நீதிமன்றம் கருத்து.
கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பணியாற்ற சட்ட விரோதமாக சிரியா செல்ல முயற்சித்தனர். அப்போது துருக்கி அதிகாரிகளால் எல்லை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் கேரளாவை சேர்ந்த இந்தியர்கள் என்பதால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்கள் கேரளாவில் இருந்து கொண்டு பல இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் பணியாற்றுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சிறை தண்டனை : இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூவரில் இருவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், மூன்றாவது நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும் , சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் கோரியும் கேரளா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீடு : இந்த மேல்முறையீட்டு மனுவில், அவர்கள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு எந்த மதமும் தீவிரவாதத்தை பரப்புவது இல்லை என குறிப்பிட்டு பேசியுள்ளனர்.
மத வெறியர்கள் : மேலும் அவர்கள் கூறுகையில், பயங்கரவாதம் என்பது மக்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் ஒரு தீமை. இது தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தையோ, வெறுப்புணர்வையோ யாரிடமும் பரப்புவது இல்லை. மத வெறியர்கள் தான் இந்த கருத்துகளை தவறாக சித்தரித்து மக்களிடம் கூறி வருகின்றனர் என தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
ஜாமீன் : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர், தண்டனை காலமான ஏழு ஆண்டுகளில் 5 ஆண்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. மீதம் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஐந்து ஆண்டுகளிலும் அவர்கள் ஜாமின் கேட்கவில்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்குமாறு வாதிட்டார். மேலும் தண்டனை காலம் முடியும் வரை எந்தவித அசம்பாவிதமும் நடைபெற வில்லை எனவும், நல்ல முறையில் சிறை தண்டனையை கழித்தால் அவர்களின் தண்டனையை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
NIA மறுப்பு : இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த, தேசிய புலனாய்வு அமைப்பான NIA அதிகாரிகள், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவும் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என NIA அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த வாதங்களை குறித்து கொண்டு தற்போது இந்த வழக்கானது கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…