நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கேள்வி நேரம் இல்லை என அறிவிப்பு.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடிக்க அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதே கூட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், ஜன.31 மற்றும் பிப் 1 ஆகிய தேதிகளில் கேள்வி நேரம் மற்றும் கேள்வி இல்லா நேரம் கிடையாது என அறிவிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…