குறைந்தபட்ச ஆதார விலையை நீக்க வாய்ப்பே இல்லை – பிரதமர் மோடி

Default Image

வேளாண் சீர்திருத்த சட்டத்தில் அவநம்பிக்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்துறை தனியார் வசம் மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்து இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்காததால்போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிந்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நலத்திட்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.அப்பொழுது அவர் பேசுகையில், கடந்த பல நாட்களாக புதிய வேளாண் சட்டங்கள் குறித்து நாட்டில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த சீர்திருத்த சட்டம் ஒரே இரவில் கொண்டு வரப்பட்டதல்ல. கடந்த 20 -22 ஆண்டுகளாக அனைத்து அரசுகளும் இதை பற்றி விவாத்துள்ளன.வேளாண் சீர்திருத்த சட்டத்தில் அவநம்பிக்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதில் பொய்களுக்கும் இடமில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்