மக்களின் விருப்பத்தை எந்த ஆதிக்கமும் அடக்கிவிட முடியாது..! மம்தா பானர்ஜி ட்வீட்..!

mamtaBannerjee

மக்களின் விருப்பத்தை எந்த ஆதிக்கமும் அடக்கிவிட முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மே 13ம் தேதி அதாவது இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் 119 இடங்களில் வெற்றி பெற்று 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து, வாக்களித்த கர்நாடக மக்களுக்கும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் தனது வணக்கத்தையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேலும், மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான ஆணையை வழங்கிய கர்நாடக மக்களுக்கு எனது வணக்கங்கள், முரட்டுத்தனமான, எதேச்சாதிகார மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் விரும்பும் போது, ஆதிக்கம் செலுத்தும் எந்த ஒரு மைய வடிவமைப்பும் அதனை அடக்கிவிட முடியாது, இதுதான் கதையின் நீதியும், நாளைக்கான பாடமும் ஆகும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்