65 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், 243 தொகுதியில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
சமீபத்தில், பீகார் உள்ளிட்ட இனிவரும் தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், பீகார் தேர்தல் மற்றும் வரவிருக்கும் பிற இடைத்தேர்தல்களிலும், 65 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சமாக 1,000 பேர் தான் வாக்களிக்கலாம். பீகாரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன. 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய சேவை பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொரோனா பாதித்து வீடு மற்றும் பிற அமைப்புகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…