பிரியாணியில் பீஸ் இல்லை! திருமண விழாவில் மோதிக்கொண்ட மக்கள்!
உத்தரபிரதேசம் : திருமணங்களின் போது அனைவரும் உணவு விரும்பி சாப்பிடுவது உண்டு. ஒரு சில இடங்களில் உணவில் எதாவது பூச்சி அல்லது உணவு சரியில்ல என்றால் சண்டை நடந்ததை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ்கள் இல்லாததால் போனதால் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் தரப்பில் இருந்து வந்த விருந்தினர்கள் திருமணத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ் இல்லாததை பார்த்தவுடன் சண்டை தொடங்கியது. ஒருவர் இதனை புகாராக கூற ஆரம்பித்த நிலையில், முழுக்க முழுக்க சண்டையாக மாறியது.
அப்போது வாய் தகராறில் இருந்த சண்டை கை கலப்பாகவும் மாறியது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஒருவரையொருவர் உதைப்பது, குத்துவது மற்றும் நாற்காலிகளை வீசி சண்டைபோட்டு கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சண்டையை பார்த்த மணமகன் கூட குழப்பத்தில் ஈடுபட்டார்.
இரு குடும்பத்தினரும் கடுமையாக மோதிக்கொண்ட அந்த வீடியோவை இணையத்தில் மிகவும் பகிரப்பட்டு வருகிறது. மோதலை தொடர்ந்து அங்கிருந்த பெரியவர்கள் தலையிட்டு சண்டையை முடித்து வைத்தனர். இது தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விலங்குகள் கூட தங்கள் உணவை பகிர்ந்து கொள்வதில் மிகவும் சிறந்தவை என்று கூறி வருகிறார்கள்.
A commotion broke out at wedding in Bareilly, Uttar Pradesh when a chicken leg piece.
Missing chicken leg pieces led to a severe beating of both the bridegroom and the baraatis.#Bareilly #UttarPradesh #Wedding #BizzareNews pic.twitter.com/6U3v4MXFIE
— IndiaToday (@IndiaToday) June 24, 2024
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் இதுவரை புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. முறையான புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.