ரெம்டெசிவிர் மருந்தை விற்க எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதுவரையில் இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த சிலர் சப்ளையரிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்காக அணுகியதாக கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே அவர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்த ரெம்டெசிவிர் மருந்தை விற்க எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என்றும், அவர்கள் அவதூறு செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திருட்டுத்தனமாக விற்பனை செய்ய முற்படுவோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…
சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…