ரெம்டெசிவிர் மருந்தை விற்க எந்த கட்சிக்கும் உரிமை இல்லை – அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே

Default Image

ரெம்டெசிவிர் மருந்தை விற்க எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதுவரையில் இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த சிலர் சப்ளையரிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்காக அணுகியதாக கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே அவர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்த ரெம்டெசிவிர் மருந்தை விற்க எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என்றும், அவர்கள் அவதூறு செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திருட்டுத்தனமாக விற்பனை செய்ய முற்படுவோர் மீது,  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 14042025
CSK WON THE TOSS
ipl 2025 poor list
GoodBadUgly BOX Office
nainar nagendran mk stalin
edappadi palanisamy admk
Ajmal - Ambulance Driver