ராகுல் காந்தி : ‘எந்த தலைவரை குறித்தும் யாரும் அவதூறாக பேசக்கூடாது’ என காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தற்போது ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் ஷர்மாவிடம் தோல்வியை சந்தித்த ஸ்மிருதி இரானிக்கு, இந்த முறை மத்திய அமைச்சரவை பதவி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து ஸ்மிருதி இரானி உட்பட 4 முன்னாள் மத்திய அமைச்சர்கள் நேற்று காலி செய்திருந்தனர்.
இந்நிலையில், புதிய அமைச்சர்கள் அனைவருக்கும் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது இதன் காரணமாக அமைச்சரவையில் இடம் பெறாதவர்கள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், முன்னாள் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி அரசு பங்களாவை காலி செய்தார். இதனால், சிலர் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். அவர் பதிவில், “வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் ஏற்படுவது சகஜம் தான். ஸ்மிருதி இரானி மட்டும் இல்லை வேறு எந்த தலைவரை குறித்தும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அறிகுறியே தவிர அது பலம் இல்லை” என பதிவிட்டிருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…