கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசி இன்று தொடக்கப்ட்டுள்ளது.அவசர கால அனுமதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத்
பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் மற்றும் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.அதன் பின்பு பேசிய கெஜ்ரிவால் தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்றும் “தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்,” என்று கூறினார்.
மேலும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் தடுப்பூசி நிர்வாகத்தைக் கண்ட கெஜ்ரிவால், டெல்லியில் 81 மையங்களில் இன்று 8,100 பேருக்கு தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினார்.