காங்கிரசின் உடைந்த ஊன்றுகோலை பயன்படுத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விடுதலை சிறுத்தைக் கட்சி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த கூட்டம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளரும், எம்.பி-யுமான அணில் பலூனி அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு தன் மீது நம்பிக்கை இல்லாததால் தான் கூட்டணிகளை தேடுவதாகும், காங்கிரஸின் உடைந்த ஊன்றுகோலை பயன்படுத்த இப்போது யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் விமர்சித்துப் பேசியுள்ளார்.
மேலும் காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது. காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டதாகவும், அதன் மீதான நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து அவர் கூறுகையில், நாட்டை முன்னேற்ற மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்று உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…