நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டங்களுக்கு எதிரான நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு பா.ஜ.க கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விவசாயிகளுக்கு சகோதரியாகவும், மகளாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாக ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்தார். இந்நிலையில், ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் , வேளாண் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த போது ஹர்சிம்ரத் கவுர் அதை எதிர்க்கவில்லை.
தற்போது மசோதாவை எதிர்ப்பதாக கூறி வரும் அவரை யாரும் நம்ப போவதில்லை என கூறினார். இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் மற்றும் மத்திய அரசின் இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட வேண்டும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறினார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…