சட்டத்திற்கு மேல் யாருமில்லை , மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது – ஐபிஎஸ் ரூபா!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து கைது செய்தனர்.மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்வது இதுவே முதல் முறை.டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை ப.சிதம்பரம் தான் திறந்து வைத்தார்.தற்போது அவர் திறந்து வைத்த சிபிஐ தலைமை அலுவலகத்திலே அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். அதில் “சட்டத்திற்கு மேல் யாருமில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகிவிட்டது ” என பதிவிட்டு உள்ளார்.
Once again proven, none is above law.
— D Roopa IPS (@D_Roopa_IPS) August 21, 2019
ப.சிதம்பரம் கைது ஆனதை தொடர்ந்து இவர் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவரது இந்த கருத்துக்கு பலர் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.