கர்நாடக கிராமத்தில் ஆச்சரியம்..! கொரோனா 2-வது அலையில் யாரும் பாதிக்கவில்லை..!
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அல்லாபூர் கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கிராம பஞ்சாயத்து தலைவர் மல்லிகார்ஜுனா ராடார் கூறினார்.
அவர் கூறுகையில், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என தொலைக்காட்சி மற்றும் செய்தி மூலம் கிராம மக்கள் தெரிந்து கொண்டனர். கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாங்கள் பயந்தோம். பின்னர், கொரோனா தொடர்பாக முழு கிராமத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், மக்கள் அனைத்து கொரோனா விதிகளையும் பின்பற்றினர் என்றும் அவர் கூறினார்.
எங்கள் கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் இதுவரை யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று கூறினார். கிராம மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினோம். கடைகளும், ஹோட்டல்களும் மூடப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவேளையை கடைபிடித்தனர். கிராமத்தில் இருந்து யாரும் மற்ற கிராமங்களுக்குச் செல்லவில்லை என கூறினார்.