கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் மாநிலங்கள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 -வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 -ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 10 -வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 01-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதையடுத்து , ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 -ம் தேதி 10 -வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
10,+2 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதவரும் மாணவர்களுக்கு வசதியாக பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது என மாநில அரசுக்கு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…