வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது-டெல்லி உயர்நீதிமன்றம்…!
சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்-யை வாங்கியது. இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். சமீபத்தில் வாட்ஸ்அப் புதிய பிரைவசி பாலிசியை வெளியிட்டது. வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் சேமித்து வைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் பகிரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த செய்தி வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம், வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
வாட்ஸ் அப் மட்டுமல்லாமல், மேலும் பல செயலிகளுக்கும் இதுபோன்ற விதிமுறைகள் உள்ளபோது, ஏன் வாட்ஸ்அப் செயலிக்கு எதிராக மட்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி, வாட்ஸ்அப் புதிய விதிமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.