இனிமேல் ATM கார்டு தேவையில்லை…! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு…!

Default Image

ATM மையங்களில், credit மற்றும் debit கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார். 

நம்மில் அதிகமானோர் பணம் எடுப்பதற்காக வங்கிகளை அணுகாமல், நமது credit மற்றும் debit கார்டுகளை பயன்படுத்தி தான் ATM-களில் பணம் எடுப்பதுண்டு. ஆனால், இந்த முறைகளிலும் பல மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ், ATM மையங்களில், credit மற்றும் debit கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. இதனை நாடு முழுவதும் அனைத்து வங்கிகள் மற்றும் ATM மையங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், credit மற்றும் debit கார்டுகள் இல்லாமல், UPI ID மூலம் பணம் எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், இதன் மூலம் ATM மையங்களில் நடைபெறும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்