விமானத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிப்பு.
இனிமேல் விமானத்தில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களிலும் கட்டாய முகக்கவச உத்தரவு தளர்த்தப்படுவதாகவும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிவது விரும்பத்தக்கது என்று மட்டுமே அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பயணிகளும் முகமூடி/முகக் கவசங்களைப் பயன்படுத்துவது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.
In view of the threat posed by COVID-19, all passengers should preferably use mask/face covers. Any specific reference to fine/penal action need not be announced as part of the inflight announcements: Ministry of Civil Aviation pic.twitter.com/V4yrH5x77Z
— ANI (@ANI) November 16, 2022