சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த கிட்டுகளும் வாங்கப்படாது – ஐசிஎம்ஆர்.!
சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த கிட்டுகளும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த பொருள்களும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் இரண்டு நிறுவனங்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் போன்ற நிறுவனங்களிடம் சுமார் 5 லட்ச ரேபிட் டெஸ்ட் கிட் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவுக்கு வந்திருந்தன.
பின்னர் இந்த ரேபிட் கிட்டுகளை மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. கொரோனாவை விரைந்து பரிசோதனை செய்யும் கருவியான ரேபிட் டெஸ்ட் கருவி கொண்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் சில மாநிலங்களில் தவறான முடிவில் காட்டுகிறது என்று தொடர் புகார் எழுந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர் வலியுறுத்திருந்தது.
அதன்பின், ரேபிட் கிட்டுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் பி.சி.ஆர் மற்றும் ஆர்.டி கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில், ரேபிட் டெஸ்ட் கருவி மாறுபட்ட முடிவுகளை காண்பிப்பதால், ரேபிட் கிட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த பொருள்களும் வாங்கப்படாது என ஐ.சி.எம். ஆர் அறிவித்துள்ளது. ஏற்கனவே வாங்கியிருந்த கிட்டுகளை திரும்ப அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு நிறுவங்களிடம் இருந்து வேற எந்த ஆர்டரும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
Due to wide variation in sensitivity, states have been advised to stop using and return antibody testing kits from Guangzhou Wondfo Biotech and Zhuhai Livzon Diagnostics. It is to clarify that no further order has been placed to these companies. #IndiaFightsCorona @MoHFW_INDIA pic.twitter.com/s011AYGfpX
— ICMR (@ICMRDELHI) April 28, 2020