இனி “INDIA” இல்லை.. “BHARAT” தான்! அதிரடியாக பாயோவை மாற்றிய அசாம் முதலமைச்சர்!

Himanta Biswa Sarma

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரான (I.N.D.I.A) குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது குறித்து நேற்று மற்றும் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக, ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத், முக ஸ்டாலின், சரத்பவார், அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதுமட்மில்லாமல், ஒன்றாக இணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயரும் வைத்து அறிவிக்கப்பட்டது.

அதாவது, பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘I.N.D.I.A’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைத்து அறிவிக்கப்பட்டது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள ஓர் அணியில் திரண்டு உள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்துள்ளனர். இந்த  நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரான (I.N.D.I.A) குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், நமது நாகரிக மோதல்கள் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயர் வைத்தனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட பாடுபட வேண்டும். அதோடு நம் முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக போராடுவோம், பாரதத்திற்காக பா.ஜ.க போராடும் என கூறியுள்ளார். மேலும், தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில், அதாவது பாயோவில் ‘அசாம் முதலமைச்சர் இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘அசாம் முதலமைச்சர் பாரத்’ என மாற்றம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்