லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

Driving Licence

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால், அதற்கான சோதனைக்கு ஆர்டிஒ அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இந்த விதியை தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது.

அதாவது, தனியார் ஒட்டுநர் பயிற்சி மையங்களே சோதனை நடத்தி லைசன்ஸ் கொடுக்கலாம் என்றும், ஜூன் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப செயல்முறை:

ஜூன் 1-ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://parivahan.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் உரிமத்தின் வகையைப் பொறுத்தது. தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அணைத்து ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

கட்டணங்கள்:

கற்றல் உரிமம் ரூ.150 எனவும், கற்றவரின் உரிமச் சோதனைக் கட்டணம் ரூ.50, ஓட்டுநர் சோதனைக் கட்டணம் ரூ. 300, ஓட்டுநர் உரிமம் வழங்க ரூ.200, சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்க ரூ.1000, உரிமத்துடன் மற்றொரு வாகன வகுப்பைச் சேர்க்க ரூ.500 ஆக லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தனியார் பயிற்சி மையங்களுக்கான புதிய விதிகள்:

ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதுவே, நான்கு சக்கர வாகனப் பயிற்சிக்கு 2 ஏக்கர் இருக்க வேண்டும். மேலும், பயிற்சி மையங்களில் தேவையான சோதனை வசதிக்கான கொண்டிருக்க வேண்டும்.

பயிற்சியாளர்கள் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 வருட ஓட்டுநர் அனுபவம் மற்றும் பயோமெட்ரிக்ஸ் மற்றும் IT அமைப்புகளை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:

இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான (LMV) பயிற்சியை 29 மணிநேரம் முதல் 4 வாரங்களில் முடிக்க வேண்டும். தியரி பயிற்சி 8 மணி நேரமும், நடைமுறை பயிற்சி 21 மணிநேரம் தேவை என பிரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கனரக மோட்டார் வாகனங்களுக்கான (HMV) பயிற்சியை38 மணிநேரம் முதல் 6 வாரங்களில் முடிக்க வேண்டும். தியரி பயிற்சி 8 மணிநேரம் மற்றும் 31 மணிநேரம்  நடைமுறை பயிற்சி தேவை என பிரிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்