புல்லட் ப்ரூஃப் உடைகளுக்கு சீன மூலப்பொருட்களை பயன்படுத்த தடை.!
இந்திய ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட் களில் சீனப் பொருட்களை உபயோகிக்க இந்திய அமைச்சகம் தடை விதித்துள்ளது.
சீன இறக்குமதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் பொருட்டு, இந்திய ராணுவத்திற்கான குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் எந்தவொரு மூலப்பொருட்களும் சீன நிறுவனங்களிலிருந்து பெறக்கூடாது என்று இந்திய உற்பத்தியாளர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் கட்டளையிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளுக்கான மூலப்பொருட்களை இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்து வந்தன. அதன் பின்னர், குறைந்த விலை காரணமாக அவை சீனாவில் இருந்து பெறப்பட்டன.
2020 இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையின் காரணமாக சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கான முயற்சியில் “ஆத்மநிர்பார் பாரத்” முடிவெடுத்தது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.