இனி 2 ஆண்டு B.Ed படிப்புக்கு அனுமதி இல்லை… தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிப்பு!

NCTE

புதிய தேசிய கல்வி 2020ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. இதனால் 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து விட்டு, B.Ed பயிலும் மாணவர்களின் வசதிக்காகவும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிக கல்விக்கொள்கை 2020யின்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) அறிவித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் 6.1 அளவில் நிலநடுக்கம்…டெல்லியில் லேசான அதிர்வு.!

இருப்பினும், தற்போது கல்வி நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. இதுபோன்று, சில கல்வி நிறுவனங்களில் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளன.

இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கவுன்சிலில் புதிய பயிற்சி திட்டத்தை விரைவில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், இதனால் இனி 2 ஆண்டு B.Ed படிப்புக்கு அனுமதி வழங்க மாட்டாது என்றும் 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 4 ஆண்டுகளுக்கு B.Ed படிப்பை நடத்த விரும்பும் கல்லூரிகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இதற்கான போர்ட்டல் திறக்கப்பட்டதும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்