புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் – உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் என உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், போக்குவரத்து சேவாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகிற நிலையில், சிலர் நடைப்பயணமாகவே நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மராட்டியத்தில், இதுவரை 33,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,198 பேர் இந்த கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் மராட்டியத்திற்கு திரும்பும் நோக்கில் உள்ளதால், மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இதுகுறித்து கூறுகையில், 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் ஊர் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். அவர்களுக்காக ரெயில்கள் மற்றும் பேருந்துகளை தயார்படுத்தி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.