என்ன நடந்தாலும் பரவாயில்லை…!சுட்டுத் தள்ளுங்க, பிரச்சினை வராது…!ஆத்திரமடைந்த முதலமைச்சர்
தனது கட்சிக்காரர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.இந்த ஆட்சி காங்கிரஸ் கூட்டணியில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்த பிரகாஷ், மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.
பின் இந்த சம்பவம் உடனே தெரிந்ததும் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி போலீஸ் அதிகாரியை உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொலை செய்தவர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார்.
இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கூறினார்.இது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இதன்பின் விளக்கம் அளித்த கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, அது தான் முதல்வராக கொடுத்த உத்தரவு கிடையாது என்றும், அந்தச் சூழ்நிலையில் ஏற்பட்ட கோபத்தினால் பேசியது என்றும் தெரிவித்துள்ளார்.