பாஜகவுக்கு எதிராக எத்தனை அணிகள் அமைக்கப்பட்டாலும் பிரதமர் மோடி தான் நம்பர் 1 என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மூன்றாம் அணியாக உருவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்போது டெல்லியில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களை தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே அவர்கள் சந்தித்துள்ளார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ், எத்தனை அணிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அமைக்கப்பட்டாலும் அது ஒரு பொருட்டே இல்லை எனவும், மோடியின் தலைமை வலுவாக உள்ளதாகவும், இன்றைக்கும் அவர்தான் நம்பர் ஒன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சரத்பவார் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது, ஏனென்றால் மகாராஷ்டிராவின் பிரபலமான தலைவர், நிறைய நற்பணிகள் செய்த தலைவர். ஆனால் இன்றைய சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரத்தில் மட்டுமே உள்ளது. நகரத்துக்கு வெளியே எந்த மாநிலங்களிலும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இல்லை எனவும், இந்த அணியில் மம்தா பானர்ஜி இணைவாரா என்பது சந்தேகம் தான் எனவும் கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஜனநாயகத்தில் வெற்றிபெற அனைவருக்குமே உரிமை உள்ளது, அனைவருக்கும் தேர்தலில் அணிகளை உருவாக்க உரிமை உள்ளது. ஆனால் நரேந்திர மோடியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என தெரிவித்துள்ளார். மேலும் சரத் பவர் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது என தன் நினைப்பதாகவும் வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 350 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…