இனிமேல் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள் கிடைக்காது.! இந்தியன் வங்கி அதிரடி அறிவிப்பு.!

Default Image
  • நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்களில் மார்ச் 1-ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் கிடைக்காது என இந்தியன் வங்கி அறிவிப்பு.

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாகவும், இதனையடுத்து ஏ.டி.எம்.களில் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதேபோல் ரூ.2000 நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும் போது ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்தியன் வங்கி வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே கருப்பு பணம், மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என கூறி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது என குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள இந்திய வங்கி பணப்பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்