பெருநிறுவனங்களுக்கு வரி குறைப்பு ,நடுத்தர மக்களின் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி இல்லை – ராகுல் காந்தி
பெருநிறுவனங்களுக்கு வரி குறைப்பு ,நடுத்தர மக்களின் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
வங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளது மத்திய அரசு என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.மேலும் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும்.வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது . உங்களது பொது முடக்க உத்தரவால் ஏற்பட்டது என்று கூறி ,வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பெருநிறுவனங்களுக்கு 1450000000000 வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
1450000000000 tax cut benefit given to big businesses.
But no interest waiver on loans for middle class.1450000000000 रुपय की टैक्स-छूट का फ़ायदा बड़े व्यवसायों को दिया गया।
लेकिन मध्यम वर्ग को लोन पर ब्याज-माफ़ी तक नहीं।क्योंकि ये है #SuitBootKiSarkar pic.twitter.com/eFMrgtKrG1
— Rahul Gandhi (@RahulGandhi) August 27, 2020