திருப்பதி லட்டுகளின் விலை உயர்த்துவது இல்லை..!அறங்காவலர் குழு தலைவர்..!
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.70-க்கு 4 லட்டுகள் வழங்கப்படும். ஒரு லட்டு தயாரிக்க 40 ரூபாய் ஆகிறது. இதனால் வருடத்திற்கு 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் தரிசனத்திற்காக காத்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு மட்டும் கொடுத்துவிட்டு மேற்கொண்டு வாங்கும் ஒவ்வொரு லட்டிற்கும் ரூபாய் 50 கட்டணம் செலுத்தும் திட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதிவு ஏற்பு விழா நடைபெற்றது.இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் திருப்பதியில் விற்கப்படும் லட்டுகளின் விலை உயர்த்துவது இல்லை, இப்போது விற்கப்படும் அதே மானிய விலையில் தான் லட்டுகள் தொடர்ந்து விற்கப்படும் என கூறினார்.