புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது – மத்திய நிதி அமைச்சகம்.!

புதிய திட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு போன்றவை செய்ய கூடாது என பல துறைகளுக்கு நிதி அமைச்சகம் ஆணை.
செலவை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய திட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு போன்றவை செய்ய கூடாது என பல துறைகளுக்கு நிதி அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. பிரதமரின் கரிப்கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டம் ஆகியவற்றை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் வரிவசூல் குறைந்து நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் செலவை குறைக்க புதிய முயற்சி என தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் வரி வருவாய் குறைந்துள்ள நிலையில் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.